விஸ்வரூபம்-2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

0

கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Vishwaroopam2 #KamalHaasan

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படம் வெளியாகாமல் பல வருடங்களாக தாமதமாகி வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. 

சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிந்த நிலையில், சமீபத்தில் தணிக்கை குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழை் கிடைத்தது.  அதுமுதல் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று இரவு 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

அது படத்தின் டிரைலர் அல்லது ரிலீஸ் தேதி அல்லது ஆடியோ ரிலீஸ் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

விஸ்வரூபம்-2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இயக்கி இருக்கிறார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தன. #Vishwaroopam2 #KamalHaasan

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More