ரணம் (மலையாளம்)

0

நடிகர்கள் : பிருத்விராஜ், ரகுமான், இஷா தல்வார், நந்து, அஸ்வின் குமார் மற்றும் பலர் டைரக்சன் : நிர்மல் சகாதேவ் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ள படம் தான் இந்த ரணம்.கேங்ஸ்டர் யுத்தத்திற்கு பெயர் போன அமெரிக்காவில் உள்ள டெட்ராய்டு நகரில் தமிழ் கேங்கின் தலைவராக இருப்பவர் ரகுமான். அவரிடம் பட்ட கடனுக்காக போதைப்பொருள் கடத்தி வேலைசெய்து வரும் கையாளான பிருத்விராஜ், கடனை அடைத்த நிலையில் ரகுமான் கேங்கிலிருந்து வெளியேறுகிறார். ஆனால் அவரைவிட்டுவிட விருப்பமில்லாத ரகுமான், பிருத்விராஜின் வளர்ப்பு தந்தை மற்றும் அவரது மகனுக்கு பிரச்சனைகளை உருவாக்கி அதன் மூலம் பிருத்வியை மீண்டும் உள்ளே இழுக்க நினைக்கிறார். பிருத்விராஜோ எதிர்பாராமல் சந்தித்த இஷா தல்வாரின் மீது காதலாகிறார்.. ஆனால் அவருக்கு டீனேஜ் வயதில் ஒரு மகள் இருக்கிறாள் என தெரிய வருகிறது. போதைப்பொருளுக்கு அடிமையான அந்த டீனேஜ் பெண் திடீரென மரணிக்க, கணவனும், இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறியும் இஷா தல்வார் வீட்டை விட்டு வெளியேறி பிருத்விராஜிடம் தஞ்சம் அடைகிறார். .இருவரும் கேரளாவுக்கு சென்று புதிய வாழ்க்கை தொடங்க முடிவு செய்ய, இதையறிந்த ரகுமான் வழக்கம்போல பிருத்விராஜை குடும்ப சென்டிமென்ட்டால் மிரட்டி, ஒரு புதிய வேலையை கொடுக்கிறார். அது தன்னையே அழிக்கும் வேலை என தெரியாமல் பிருத்விராஜ் அதை ஏற்றுக்கொள்கிறார்.. ரகுமானின் திட்டம் பலித்ததா..? அதையும் தாண்டி பிருத்விராஜ், இஷா தல்வாருடன் தான் நினைத்த வாழக்கையை வாழ முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.கேங்ஸ்டர் படம் என்றாலும் கேங்ஸ்டர் யுத்தத்திற்கு அவ்வளவாக வேலை வைக்காமல், கேங்கிற்குள் நடக்கும் உள்குத்துக்களை மையப்படுத்தி படத்தை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் நிர்மல் சகாதேவ். படம் முழுதும் சீரியஸாக நடித்திருக்கும் பிருத்விராஜ் ஒரு சூழ்நிலை கைதியாக தனது கேரக்டரை பிரமாதப்படுத்தி இருக்கிறார். வரும் காட்சிகளில் எல்லாம் தமிழ் பேசி கேங்ஸ்டராக கெத்து காட்டியிருக்கும் ரகுமான், தமிழ்ப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி விடுகிறார். டீனேஜ் பெண்ணுக்கு அம்மாவாக இஷா தல்வார் கச்சிதமான தேர்வு என்றாலும், அவரை பார்த்த கணத்திலேயே அவர்மீது பிருத்விராஜ் காதலாவது ரசிகர்களுக்கு உண்மையிலேயே ஷாக்கிங்.தான்.ஜிக்மி டென்சிங்கின் ஒளிப்பதிவும் ஜாக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் கூடவே அமெரிக்கன் இங்கிலீஷ் வசனங்களும், கார் சேசிங்குகளும் நிஜமாக ஹாலிவுட் படம் பார்ப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் கேங்ஸ்டர் பட ரசிகர்களை (மட்டும்) திருப்திப்படுத்தும் இந்த ரணம்

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More