தமிழுக்கு வரும் இந்தி படங்கள்

0

இந்தியில் வெளியாகி வெற்றி பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளில் மீண்டும் எடுக்கப்படுவதும், அதேபோல் தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்கள் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்படுவதும் வழக்கமாக நடந்துவருகிறது.

இந்தியில் வெளியாகி வெற்றி பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளில் மீண்டும் எடுக்கப்படுவதும், அதேபோல் தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்கள் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்படுவதும் வழக்கமாக நடந்துவருகிறது.

சிவாஜி நடித்த ராஜா, எங்கிருந்தோ வந்தாள், சங்கிலி ரஜினி நடித்த பில்லா,மிஸ்டர் பாரத், தர்மத்தின் தலைவன்,வேலைக்காரன், படிக்காதவன், மாவீரன் போன்றவை இந்தியை தழுவி எடுக்கப்பட்டன. ரஜினியின் அண்ணாமலை படம் கூட இந்திப் படத்தின் தழுவலே. இந்த வழக்கம் மீண்டும் வருகிறது.

தற்போது மீண்டும் அதிக அளவில் இந்திப் படங்கள் தமிழில் ரீமேக் ஆகின்றன. இந்தியில் நாயகி மையப் படங்கள் வெற்றிபெறத் தொடங்கியதே இதற்கு காரணம். நயன்தாரா, திரிஷா போன்றவர்கள் நாயகி மையப்படங்களில் நடிக்க தொடங்கியதால் இந்தி படங்கள் தமிழுக்கு படையெடுக்கின்றன. வித்யாபாலன் நடித்த கஹானி படத்தை தழுவி நயன் தாரா நடித்த அனாமிகா எடுக்கப்பட்டது.

தமிழுக்கு வரும் இந்தி படங்கள்

ஆனால் தோல்வி அடைந்தது. அமலா பால் நடித்த அம்மா கணக்கு படம் ஒரு இந்தி படத்தின் தழுவல். இந்தியில் வெளியாகி கங்கணாவுக்கு தேசிய விருது வாங்கி தந்த குயின் தமிழில் காஜல் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் என்று உருவாகிறது. த்ரிஷா நடிப்பில் உருவாகும் கர்ஜனை படம் என்.எச் 10 என்ற படத்தின் தழுவல் என்கிறார்கள். ஜோதிகா நடிப்பில் உருவாகும் காற்றின் மொழி படம் வித்யா பாலன் நடிப்பில் உருவான தும்காரி சுலு படத்தின் ரீமேக்.

அனுஷ்கா சர்மா நடித்த பரி படத்தை நயன் தாராவை வைத்து ரீமேக் செய்ய திட்டமிடுகிறார்கள். தமிழில் புதிய கதைகள் எதுவும் கிடைக்காததால் நட்சத்திரங்கள் ரீமேக்கில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதே நேரத்தில் தமிழில் இருந்தும் சிங்கம்,போக்கிரி, துப்பாக்கி போன்ற படங்கள் இந்தியில் உருவாக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More