டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்

0

விக்ரம், பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார்கள். #SaamySquare

ஹரி இயக்கத்தில் `சாமி’ படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அந்த மோஷன் வீடியோவின் முடிவில், படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. 

அதன்படி படத்தின் டிரைலர் வருகிற மே 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது டிரைலர் வெளியிட்டை மாற்றி இருப்பதாக தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதால், இது கொண்டாடுவதற்கான நேரம் இல்லை என்றும் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதால், டிரைலர் வெளியீட்டி தள்ளி வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். விரைவில் சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்

இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #SaamySquare #Vikram

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More