அஜித்தின் இந்த செயலை கண்டு வியந்த விஸ்வாசம் படக்குழு

0

நடிகர் அஜித்குமார் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் வேதாளம்,என்னையறிந்தால்,விவேகம் போன்ற படங்களை தொடர்ந்து தற்போது ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார்.அந்த படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.இந்தப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற்றது.இந்த படப்பிடிப்பில் அஜித்குமார்-நயன்தாரா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளும், ஒரு சண்டை காட்சியும் அங்கு படமாக்கப்பட்டன. அத்துடன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அதனை தொடர்ந்து படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வேலைகள், வருகிற 27-ந் தேதி முதல் சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அஜித் தங்கியிருந்தபோது, அவருடைய எளிமைக்கு சான்றாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

அதாவது ‘விஸ்வாசம்’ படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்ற அஜித்குமார் அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் ‘விஸ்வாசம்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த 10-ந் தேதியுடன் முடிவடையுமாறு திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு சில காட்சிகளை படமாக்குவதற்கு மேலும் சில நாட்கள் தேவைப்பட்டது. அதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு வேலைகள் முடிவடையாததால் அஜித் தங்கியிருந்த ஓட்டல் அறையில், மேலும் 2 நாட்கள் அங்கு தங்குவதற்கு அனுமதிக்கும்படி, ஓட்டல் நிர்வாகியிடம் படத்தின் தயாரிப்பு நிர்வாகி அனுமதி கேட்டார்.

இந்தநிலையில் ஏற்கனவே செய்திருந்த ஒப்பந்தப்படி, அந்த அறை 11-ந் தேதி முதல் இந்தி நடிகர் ரன்வீர் கபூருக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஓட்டல் நிர்வாகி கூறினார்.இதன் காரணமாக “நம்மால் இன்னொரு நடிகருக்கோ அல்லது படக்குழுவினருக்கோ எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது” என்று கூறிய அஜித் தன் தங்கியிருந்த அறையை உடனே காலி செய்து விட்டார்.

அதன் பிறகு “நன் தங்குவதற்கு எனக்கு ஒரு சின்ன கட்டிலும், மின்விசிறியும் இருந்தால் போதும்” என்று கூறிய அவர், அந்த ஓட்டலில் உள்ள ஒரு சிறிய அறையில் தங்குவதற்கு சம்மதித்தார். அவரின் இந்த எளிமையை கண்டு அனைவரும் வியந்து பேசினார்கள்.

Subscribe to YouTube Channel

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More